Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 14 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித், வ.துசாந்தன்
கடந்த பெரும்போகத்தில் உரமானியக் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டு, நெற்செய்கையில் ஈடுபடாத விவசாயிகளுக்கு இம்முறை அக்கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனத் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (13) பிற்பகல் நடைபெற்றது.
கடந்த பெரும்போகத்தின்போது, 55 கோடியே 33 ஆயிரம் ரூபாய்; உரமானியக் கொடுப்பனவு மட்டக்களப்பில் 36,500 விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும், கடந்த போகத்துக்கான உரமானியக் கொடுப்பனவு சிலருக்கு இதுவரையில் கிடைக்காமல் இருக்கலாம். அது அவர்களின் வங்கிக் கணக்குகளில் காணப்பட்ட தவறு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான தவறு இனிமேலும் ஏற்படாத வகையில் விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஓர் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் படி 5 ஏக்கருக்கு விவசாயி ஒருவருக்கு உரமானியக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
மேலும், மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை 6,392 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளுகுணாவை, கடுக்காமுனை, சேவகப்பற்றுக்குளம், மகிழடித்தீவுக்குளம். அடைச்சல்குளம், தாந்தாக்குளம், விழிம்பாகக்குளம், மீனாட்சியடி, களிமடு, வீரகண்டிக்குளம் நீறுபோட்டசேனை குளம், கொல்லநுலை, தாமரைக்கேணி, புதுவெளி உள்ளிட்ட குளங்களைப் பயன்படுத்தி சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago