Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
அமைச்சர் மனோகணேசன் வடக்கு ,கிழக்கு தமிழர்களுக்காக பல்வேறு வழிகளிலும் குரல் எழுப்பிவந்துள்ளார்.அவர் தமிழர்களின் உரிமைப்பிரச்சினையில் தலையிடமாட்டேன் என கூறுவது தமிழ் மக்களுக்கு ஓரு துரதிர்ஷ்டவசமான விடயமென கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தெரிவித்தார்.
அவர் அந்த நிலைப்பாட்டினை விலக்கிகொள்ளவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியம் தெரிவித்துள்ளதுடன் வடகிழக்கில் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கும் உரிமைசார்ந்த விடயங்களுக்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் பக்கபலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுமாலை மட்டக்களப்பில் உள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளர் டாக்டர் அருளானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன்,
தேசிய கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பிரிவினையினை ஏற்படுத்தி அதில் குளிர்காய வேண்டும் என்றே எப்போதும் எதிர்பார்க்கின்றனர். எந்த அரசாங்கம் என்றாலும் தமிழர்களை புறந்தள்ளுவதிலும் அவர்களுக்கு வேறு சாயம்பூசுவதிலும் குறியாக இருப்பார்களேயொழிய தமிழ் மக்கள் மீது அக்கரையோ,நலனோ இருக்கமுடியாது.அவ்வாறு இருந்திருந்தால் 70வருடகாலத்தில் பிரச்சினையை தீர்த்துவைத்திருப்பார்கள்.
தமிழ் அரசியல்தரப்பினர் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குகின்றபோதிலும் அவர்கள் ஆட்சியமைப்பதில் காட்டும் ஆர்வத்தினை எமது பிரச்சினைகளை தீர்ப்பதில் காட்டுவதில்லை.
கன்னியாவில் இந்துமதகுருமார் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு கிழக்கு தமிழர் ஒன்றியம் வன்மையான கண்டனத்தினை தெரிவிப்பதுடன் இவ்வாறான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கையெடுக்கவேண்டும்.
கன்னியா விவகாரத்தில் அமைச்சர் மனோகணேசன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன் ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
44 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
50 minute ago
59 minute ago
1 hours ago