Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்கின்ற அடை மழை காரணமாக உறுகாமம் நீர்ப்பாசனக் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததன் காரணமாக இரண்டு வான்கதவுகள் 03 அடிக்கு திறந்துவிடப்பட்டுள்ளதாக உறுகாம நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் க.அகிலன் தெரிவித்தார்.
இந்தக் குளத்தின் நீர்மட்டம் 16 அடிக்கு உயர்வடைந்து 03 அங்குலத்துக்கு வான் பாய்ந்ததன் காரணமாக இரண்டு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 22 அடி 4 அங்குலமாகவும் வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி 09 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025