2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உலகத் தொடர்பாடல் தின விழா

எஸ். பாக்கியநாதன்   / 2017 நவம்பர் 05 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத் தொடர்பு நிலையம் நடத்திய 51ஆவது உலகத் தொடர்பாடல் தின விழா நிகழ்வுகள், புளியந்தீவு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நேற்று (04)  நடைபெற்றது.

ஊடகம் உள்ளிட்ட சமூகத் தொடர்பாடல் சாதனங்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை மற்றும் தொடர்பாடல் வருகை விரிவுரையாளர் ஸ்டான்லி பிரபாகரன் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில், முதலாம் பரிசுபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியில் கற்கைகள் நிறுவக மாணவர்களின் “இலங்கைத் திருச்சபையின் காவலன்” என்ற நாட்டிய நாடகம் மற்றும் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் குறுந்திரைப்படம், கலைக்கோட்டனின் “தூய ஜோசப்” கூத்து உள்ளிட்ட கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

50 வருட குருத்துவப் பணியை நிறைவு செய்த அருட்கலாநிதி டொமினிக் சுவாமிநாதன் மற்றும் கலை, எழுத்து, சாரணியம், சமூகப் பணி சேவைகளுக்காக கலைக்கோட்டன் அ. இருதயநாதனுக்கு, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா மற்றும் சமூகத் தொடர்பு நிலைய இயக்குனர் அருட்தந்தை பி.ரமேஸ் கிறிஸ்டி ஆகியோர் பொன்னாடை போத்தியும் நினைவுச்சின்னம் மற்றும் பணப்பரிசு வழங்கிக் கௌரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X