Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து நின்று களம் இறங்க மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் யூ.எம்.றிபாய் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏறாவூரில் அமைந்துள்ள கட்சிக் கிளைக் காரியாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் மாற்று அரசியல் சிந்தனைகளை சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பாக, பாரம்பரிய அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த கள நிலவர ஆய்வை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமைத்துவத்தை வழங்க ஜே.வி.பி. முன்வந்துள்ளது. அதன் பிரதிபலனாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்காகப் போட்டியிட்டு ஜே.வி.பி. தனது பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்துமெனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago