2025 மே 09, வெள்ளிக்கிழமை

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பில் இன்று (30) காலை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் கவன ஈர்ப்பு போராட்டம்,  மட்டக்களப்பு- காந்திபூங்கா முன்பாக இடம்பெற்றது.

கடந்த 27ஆம் திகதி இரவு, கல்லடி பாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழ் மக்கள் விடுதலைப்புலி கட்சி உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் தாக்கப்பட்டதற்கு எதிராக,  கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வன்முறை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளிவை, மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தி ஜனநாயகத்தின் குரல்வளையினை நசுக்காதே,தாக்காதே தாக்காதே மக்கள் பிரதிநிதிகளை தாக்காதே,வேண்டும் வேண்டும் நீதிவேண்டும் போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏற்தியவோறு மக்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X