Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 25 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் குரல் ஒலிக்க வேண்டும்” என, மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரும் பேராசிரியையுமான சரோஜா போல் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது,
“அநியாயங்களை தட்டிக் கேட்பவர்களாக உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
“எதிர் கால சந்ததியினராவது விமோசனம் அடைந்த நாட்டில் வாழக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஓர் உள்ளூராட்சி மன்றமானது சுகாதார சேவை செய்வது, பாலர்பாடசாலைகளை அமைப்பது, குப்பைகளை அகற்றுவது, வடிகான்களை சுத்தம் செய்வது, திண்மக்கழிவகற்றல், மீள் சுழற்சி நிலையங்களை உருவாக்குவது போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளை செய்ய வேண்டும்.
“அவ்வாறு மக்கள் நலன் கருதி செயற்படுகின்றவர்களைக் கொண்ட ஓர் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கிக் கொள்ள நம் அனைவருக்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.
“தற்போதைய நிலையைப் பார்த்தால் மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணத்தை சுயநலத்துக்காகப் பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகளிடமிருந்து உள்ளூராட்சி மன்றங்களை மீட்டெடுக்கும் கடமை உங்கள் மத்தியில் இருக்கின்றது. அந்தக் கடமையை வாக்குகளின் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.
“நாங்கள் போராடத்தேவையில்லை. வேறு ஏதேனும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தேவையில்லை. சண்டைகள், அடாவடித்தனங்களில் ஈடுபடத் தேவையில்லை. ஆனால், எமது முக்கியமான கடமை, எமது வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்துவதாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago