2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞன் சிக்கினார்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியுடன் 27 வயது இளைஞனை, நேற்று (13) மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, ஓமனியாமடு பிரதேசத்தில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, அந்தப் பகுதி காட்டில் இருந்து வீட்டுக்கு உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியை எடுத்துக் கொண்டுவந்த இளைஞனை மடக்கிபிடித்து கைது செய்ததுடன், துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X