Freelancer / 2023 மார்ச் 12 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தால் உழுது கொண்ட போது, உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனைச் செலுத்திய சாரதி உயிரிழந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34 வயதுடைய தர்மதாசா சதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உழும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, உழவு இயந்திரத்தின் பின்பக்க ரயர்கள் வயலில் புதைந்ததையடுத்து, உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழக புரண்டுடதையடுத்து, அவர் கீழ் விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு படுகாயமடைந்ததையடுத்து, சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரை பொலிஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (N)
48 minute ago
50 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago
20 Nov 2025