Princiya Dixci / 2021 ஜனவரி 24 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்
கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவுப் பிரதேசத்தில் ஊஞ்சலாடிய 8 வயதுச் சிறுவன், சேலையில் கழுத்து இறுகியதால் உயிரிழந்துள்ள சம்பவம், நேற்று (23) இடம்பெற்றுள்ளது.
மகிழடித்தீவு, கட்டுபத்தை பகுதியைச் சேர்ந்த மனோகரன் கேதீசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை விடுமுறை என்பதால் தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த போது மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாய், மாடு மேய்த்துவிட்டு தனது மகனை வீட்டில் வந்து தேடியபோது, மகன் மாமரத்தில் சேலையில் சிக்கியிருந்ததையடுத்து, அவரை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தைப் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்கும் பணித்தார்.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
44 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
4 hours ago