2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் தாமதம்

Niroshini   / 2016 ஜனவரி 27 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் இவ்வருடம் தாமதம் நிலவி வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஊடக அனுமதி அட்டையை வழங்குவதில் இவ்வருடம் தாமதம் நிலவி வருவதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஊடக அனுமதி அட்டை கடந்த காலங்களில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உரிய நேரத்துக்கு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் இந்த வருடம் 2016 புதுவருடம் தொடங்கி 26 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னும் ஊடக அனுமதி அட்டை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கவில்லையெனவும் தெரிவித்தனர்.

இதனால் தற்போது பிராந்திய ஊடகவியலாளர்கள் 2015ஆம் ஆண்டுடன் கலாவதியான ஊடக அனுமதி அட்டையை தற்போது தங்களிடம் வைத்துள்ளதாகவும், 2016 புதிய வருடத்துக்கான ஊடக அனுமதி அட்டை வழங்குவதில் தற்போது காணப்படும் தாமதம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு புதிய வருடத்துக்கான ஊடக அனுமதி அட்டையை உடன் வழங்குமாறும் பிராந்திய ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X