2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம்

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன், கே.எல்.ரி.யுதாஜித், துஷாரா

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு ஆய்வாளருமான, தர்மரெட்ணம் சிவராமின் (தராக்கி) 13ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில், எதிர்வரும் 28ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

“இலங்கை அரசியலில் மக்கள் மயப்படவேண்டிய ஊடக மனோநிலை” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அ.நிக்சன் உட்பட சிங்கள, தமிழ் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் சிவராமின் நெருங்கிய நண்பர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, சிரேஷ்ட ஊடகவியலாளர் சண். தவராஜாவின் “தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு” என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், புதிய செய்தித் தளம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

மேலும், சிவராம் நிகழ்வையொட்டியதாக “ஊடகம் - மக்கள் - அரசியல்” என்ற தலைப்பில், அன்றைய தினம் காலை, கல்லடியிலுள்ள "வொயிஸ் ஒப் மீடியாவில்" ஊடகப் பயிற்சிப் பட்டறையொன்றும் நடைபெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X