2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Editorial   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , வடிவேல் சக்திவேல்

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டத்துக்கமைவாக நடத்தப்படும் மட்டக்களப்பு மாவட்ட, பிரதேச  ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று, நாளை மறுதினம் (10) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது விடயமாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவேவ, மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தச் செயலமர்வில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் சம்பந்தமான தெளிவுபடுத்தல்கள், ஊடகத்துறை ஆற்றலையும் அறிவையும் மேம்படுத்தும் விரிவுரைகளும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X