Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ். பாக்கியநாதன் / 2017 ஜூலை 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள நல சுகாதாரம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக, மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், இன்று (21) நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், உள நல சுகாதாரம் மற்றும் உளநலம் பாதிக்கப்படடோரால் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களும் அவற்றைத் தணித்தலும் பற்றி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநலப் பிரிவு வைத்தியக் கலாநிதி டான் சவுந்தரராஜன் தெளிவுபடுத்தினார்.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமைகள் மீறல், உடலியல் தண்டனை மற்றும் சிறார்களை பல்வேறுபட்டு துன்பத்துக்கு உள்ளாக்குதல் பற்றி, மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் நலன் பாதுகாப்பு அலுவலக உத்தியோகத்தர் வி. குகதாசன் விளக்கமளித்ததோடு, சிறுவர் குற்றங்களை விசாரிப்பதற்காக பத்தரமுல்லையில் மட்டும் உள்ள சிறுவர் நீதி மன்றம் போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
14 minute ago
24 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
42 minute ago
47 minute ago