Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழு நேர ஊடகவியலாளர்கள் முகங்கொடுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, விவரங்களைப் பெறும் நடவடிக்கையில் ஊடக அமைச்சு ஈடுபட்டுள்ளது.
ஊடக அமைச்சின் பணிப்புரைக்கமைய, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இந்த விவரம் திரட்டும் சந்திப்பு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் அழைப்பின் பேரில் இன்று (29) இடம்பெற்றது.
மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தத்தின் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்த விவரம் திரட்டும் சந்திப்பில், மட்டக்களப்பில் பணியாற்றும் முழு நேர ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பல்வேறு செய்தி நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் முழு நேர ஊடகவியலாளர்களிடமிருந்து அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றிய விவரம் விரிவாக தெரியப்படுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago