2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஊறணியிலும் கல்வீச்சு

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு - ஏறவூரிலிருந்து கல்முனை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை காலை பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மட்டக்களப்பு - ஊறணியில் வைத்து கல்வச்சு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், குறித்த பஸ் வண்டியின் கண்ணாடி சேமைடைந்துள்ளது.

குறித்த பஸ் வண்டியில் பத்து பேர் அளவில் பயணித்ததாகவும் இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு பஸ் வண்டி கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மீண்டும் ஏறாவூர் டிப்போவுக்கு பஸ் வண்டியை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X