2025 மே 12, திங்கட்கிழமை

ஊறணி விபத்தில் பெண் படுகாயம்: சாரதி கைது

Editorial   / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு- கொழும்பு வீதி ஊறணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் கோழிகளை ஏற்றிச் சென்ற  கன்ரர் ரக வாகனமும் மோதிய விபத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்திச் சென்ற பெண், படுகாயமடைந்துள்ளார். கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனமும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

   இன்று புதன்கிழமை (02) அதிகாலையில் இடம்பெற்ற சம்பவத்தில்,  படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பகுதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்தை நோக்கி கோழிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த கன்ரர் ரக மட்டக்களப்பில் இருந்து ஊறணிக்கு சென்ற மோட்டார் சைக்கிளும், ஊறணி சந்தியில் வைத்தே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ள   மட்டு. தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X