Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், வீட்டுத்திட்டங்களையும் பெற முடியாத நிலையை அடைந்திருப்போமென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில், “புதிய கிராமங்கள்” எனும் தொனிப்பொருளில், தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் உதவியுடன், வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் நடைபெற்ற 52 நாள்கள் அரசியல் சதிட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முறியடிக்கப்பட்டதாகவும் அப்போதைய சூழலில், வீடமைப்பு நிர்மாணத்துறையின் அமைச்சராக விமல் வீரவன்சவைத் தெரிவுசெய்திருந்தனர் எனவும் தெரிவித்ததுடன், அது தொடர்ந்திருந்தால், இன்று இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்காது என்றார்.
வரவு – செலவுத்திட்டத்துக்கு, கூட்டமைப்பினர் வாக்களித்தமைக்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்துவருகின்றனர் எனத் தெரிவித்த சிறிநேசன் எம்.பி, பாதீடு தோற்கடிப்பட்டிருந்தால், தேர்தல்லொன்றுக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டிருக்கும் எனவும் இன்று குற்றவாளிகளாக இருக்கின்றவர்கள் கதாநாயகர்களாக மாறியிருப்பர் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025