2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

’எந்தவொரு சிகிச்சைப் பிரிவும் மூடப்படவில்லை’

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் எந்தவொரு சிகிச்சைப் பிரிவும் மூடப்படவில்லையென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் திருமதி கே.கலாரஞ்சனி, இன்று (14) தெரிவித்தார்.

இது ​தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தமது வைத்தியசாலையில் கடமை புரியும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதன் மூலம், தமது வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு மிக குறைவாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இருப்பினும், மேலதிக கலந்துரையாடலின் பின்னர் அந்தப் பிரிவில் வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதெனவும் கூறினார்.

“எனவே, தமது வைத்தியசாலையில் எந்தவொரு சிகிச்சை பிரிவும் மூடப்படவில்லை என்பதோடு, வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழமைபோலவே முன்னெடுக்கப்படுகின்றன” எனவும், டொக்டர் திருமதி கே.கலாரஞ்சனி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .