Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 26 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
'பொலிஸ், காணி அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாட்சி எமக்குத் தேவை. அந்த சுயாட்சியை அடையும்வரை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தம்; கருணாகரன்; தெரிவித்தார்.
'எமக்குச் சுதந்திரம் கிடைக்கும் வரையாவது நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தற்போது சுதந்திரம் இருக்கும் காரணத்தாலும், எதுவித அச்சுறுத்தல்கள்; இல்லாத காரணத்தாலும் தேர்தலில் குதிப்பதற்காக பலரும் தயாராகுகின்றார்கள்' எனவும் அவர் கூறினார்.
திக்கோடையில்; ஆரம்ப வைத்திய பராமரிப்புப் பிரிவு வைத்தியசாலைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'தற்போது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பானது, ஓரளவேனும் ஒரு சில அபிவிருத்திகளைச் செய்து வருகின்றது.
'யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பலவற்றை இழந்துள்ளார்கள். இந்த நிலையில், நாம் இன்னும் நிலையான அபிவிருத்தியை நோக்கிச் செல்லவில்லை. 'மேலும் எமக்கு நிலையான தீர்வுத்திட்டமும் வேண்டும்' என்றார்.
'தமிழர்கள் ஏனைய இனத்தவர்களுக்கு வாக்களிக்கும் நிலைமையும், தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்காத நிலைமையுமே கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது. எனவே, எதிர்வரும் தேர்தல்களில் எமக்குரிய தேர்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாத்திரம் இருக்க வேண்டும்.
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் செயற்படுபவர்களுக்கே எமது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும்.
'எதிர்வரும் செப்டெம்பருடன் கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் முடிகின்றது. மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்.
'கடந்த முறை போலல்லாமல், 2012ஆம் ஆண்டில் மாகாணசபை உறுப்பினர்கள் 6 பேரைப் பெற்றுக்கொடுத்த எமது மக்கள், நடைபெறவுள்ள தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் 8 பேரை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும். இதற்காக வேண்டி 85 சதவீதத்துக்கும் அதிகமாக எமது மக்கள் வாக்களிக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago