2025 மே 07, புதன்கிழமை

எமது ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணம் தன்னிறைவு காணும்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சகல வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள கிழக்கு மாகாணம் எமது ஆட்சிக் காலத்தில் தன்னிறைவடையும் அதேவேளை, ஏற்றுமதி வலயமாகவும் திகழுமென அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கின் விவசாய எழுச்சிக் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு, சித்தாண்டி வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை  ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இனங்கள் இணைந்த எமது ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணம் தன்னிறைவு கண்டு விடுமென்பதில்; நாம் நம்பிக்கையுடன் உள்ளோம். அத்தனை உற்பத்தித் துறைகளுக்கும் உரிய ஏற்றுமதி வலயமாக கிழக்கு மாகாணத்தை உருவாக்கிக் காட்டுவோமென்பதில் நாம் உறுதியாக உள்ளோம்' என்றார்.

'மேலும், நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய மாகாணமாக கிழக்கு மாகாணம் திகழும். அதற்கு தமிழ்,  முஸ்லிம் சமூக உறவு பக்கபலமாக அமையும்' எனவும் அவர் தெரிவித்தார்.

'சகலவிதமான வளங்களையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம் பல துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டியுள்ளது. இந்த மாகாணத்தில் 70 சதவீதமானவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இயற்கையோடு இணைந்த விவசாயத்தை நவீனப்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் நாம் தன்னிறைவைக் காணலாம்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X