Editorial / 2018 ஜனவரி 16 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பி.எம்.எம்.ஏ.காதர்
“மருதமுனை பிரதேசத்தில், நேர்மையான கலப்படமற்ற அரசியல் பாதையை நோக்கி நகருகின்ற ஓர் உன்னதமான தருணத்தில் பயணிக்கிறோம். இந்தப் பயணத்தில் இளைஞர்கள் இணைய வேண்டும்” என , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மருதமுனை, 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் வை.கே.ரஹ்மான் தெரிவித்தார்.
மருதமுனை, 3ஆம் வட்டாரத்தில் நேற்று (15) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பாகும். ஆனால், சில அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் இளைஞர்களை கறிவேப்பிலையாகப் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசிவிடுகின்றார்கள் இதனால் பல இளைஞர்கள் விரக்தியுற்ற நிலையில், தவறான வழியில் பயணிக்கின்றார்கள். அவ்வாறானவர்களை நல்வழிப்படுத்துவதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னின்று செயற்படுகின்றார்.
“மருதமுனையில் பல கட்சிகளில் இணைந்து செயற்பட்டவர்கள், அக்கட்சிகளின் செயற்பாடுகள் திருப்பியளிக்காமையால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இணைகின்றவர்களை நாங்கள் கௌரவமாக வரவேற்கின்றோம். அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்கு காலக்கிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .