Freelancer / 2022 ஜூன் 04 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடாவில் எரிவாயுவை வழங்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெற்றுச் சிலிண்டர்களுடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியை மறித்து மக்கள் நேற்று (3) போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டதையடுத்து காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டகாரர்களை வீதியை விட்டு விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் தமக்கு எரிவாயு தந்தால் தான் அங்கிருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் எரிவாயு முகவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பு கொண்டபோது, தற்போது எரிவாயு இல்லை எனவும் எதிர்வரும் 12 ஆம் திகதி இந்த குறித்த மக்களுக்கு எரிவாயு வழங்குவதாக முகவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் வழங்கிய வாக்குறுதியையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். (a)
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025