2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எல்லைப்புறக் கிராமங்களில் அபிவிருத்திகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய  நிலையிலுள்ள தமிழ் மக்களின்; எல்லைப்புறக் கிராமங்களில்  அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்குமாறு புலம்பெயர் வாழ் தமிழ் அமைப்புகளிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

'வீதியிலும் ஒரு நாள்' என்ற செயற்றிட்டத்தின் கீழ் வவுணதீவுப் பிரதேச  செயலகப் பிரிவுக்குட்பட்ட பன்சேனைக் கிராம மக்களைச் திங்கட்கிழமை (6) சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'கிராமத்தின் தேவைப்பாடுகளை அரசாங்கத்தின் மூலமாகவோ, எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாகவோ, புலம்பெயர் வாழ் தமிழ்  அமைப்புகளின் நிதியுதவியினாலோ பூர்த்தி செய்து தருவேன்.

பல கிராமங்களுக்கு நான் நேரடியாகச் சென்று அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடி, என்னால் முடிந்தவரையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X