Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூன் 03 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
“மட்டக்களப்பு மற்றும் வாகரை வாவிகளுக்கான எல்லையிடலுக்காக ரூபாய் 150 மில்லியன் செலவிடப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு வாவிக்கு மட்டும் 33 மில்லியன் ரூபாய் எல்லையிடலுக்காக செலவிடப்பட்டுள்ளது” என, கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ. கோகுலதீபன் தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கிணங்க மட்டக்களப்பு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் வாவி முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் ருபாய் 8 இலட்சம் செலவில் மீனவர் இளைப்பாறும் மண்டபம் நேற்று (02) திமிலைதீவில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்
“குறித்த மண்டபத்தினால் 55 மீனவக் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இப்பிரதேசத்தில் வாவியை எல்லையிடல், கண்டல் தாவரங்களைப் பாதுகாத்தல், அனர்த்தத்தை முகம்கொடுக்கும் வகையில் மக்களைத் தயார்படுத்துதல் என்பன இடம்பெறவுள்ளன.
விசேட முகாமைத்துவ பிரதேசங்களாக மாவட்டத்தில் வாகரை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் கரையோர வலய வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 14 மில்லின் அமெரிக்க டொலர் கரையோரம் பேணலுக்காக விவசாய அபிவிருத்தி சர்வதேச நிதியம் மற்றும் உலகளாவிய சுற்றாடல் ஏற்பாடு ஆகிய நிறுவனங்கள் மானியமாக வழங்கியுள்ளன.
இவற்றில் மட்டக்களப்பு மற்றும் வாகரை வாவிகளுக்கு எல்லைப்படுத்தலுக்காக 150 மில்லியனும் அதில் மட்டக்களப்பு வாவிக்கு- 33 மில்லியன், வாகரை வாவிக்கு -10 மில்லியன், வாகரை விவசாயக் கிணற்றுக்கு-9 மில்லியன், வாகரை படகுச் சவாரி-10 மில்லியன், வாகரை சூழலியல் பூங்கா - 6 மில்லியன், நாசிவன்தீவு சுற்றாடல் கற்கைகள் நிலையம்-6 மில்லியன், கல்லடி கடற்கரைப் பூங்கா -6 மில்லியன், வாகரை மலசல கூடம் - 6 மில்லியன் மற்றும் வாகரை பழ மரக்கண்றுகள் நடல் - 6 மில்லியன் 2011 முதல் 2017 வரை செலவிடப்பட்டள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago