2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் நகரசபையில் 74 ஊழியர்களுக்கு மீள் நியமனங்கள்

Suganthini Ratnam   / 2017 மே 02 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையில் ஒப்பந்தக் காலம் முடிவடைந்த 74 ஊழியர்களுக்கு மீள் நியமனங்கள்  மே தினத்தன்று திங்கட்கிழமை (1) வழங்கப்பட்டுள்ளன என  நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.

இவர்களின் ஒப்பந்தக் காலம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்த 74 ஊழியர்களும் மீளவும் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒப்பந்த மற்றும் பதிலீட்டு அடிப்படையில் ஊழியர்களாக  நியமனங்கள்  வழங்கப்பட்டுள்ளன.  

இந்நிலையில், ஏறாவூர் நகர சபையில் காணப்பட்ட ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

இவர்களுக்கான நியமனங்களை ஏறாவூர் நகர சபையில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வழங்கி வைத்துள்ளார் எனவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X