2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் கமநல சேவைகள் அபிவிருத்தி அலுவலகம் வேண்டும்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளின் நன்மை கருதி கமநல சேவைகள் அபிவிருத்தி அலுவலகமொன்றை ஏறாவூரில் திறக்குமாறு அவ்விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கடந்த பல வருடங்களாக வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் விவசாயிகள் கூறினர்.

தங்களின் விவசாயத் தேவைகளுக்காக 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கூமாச்சோலைப் பகுதியிலுள்ள கமநல சேவைகள் அலுவலகத்துக்கு ஏறாவூர் விவசாயிகள் செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை, கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதியின்றியுள்ள விவசாயிகள் கால்நடையாக கூமாச்சோலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X