Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் வாவிக் கரையோரமாக குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் நிறைந்த பகுதி எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குப் பின்னர் எழில் கொஞ்சும் அழகுப் பூங்காவாக மாற்றப்படும் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாவிக்கரையோரத்தில் 'ஆற்றலுள்ள இளைஞர்கள்' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட உடல் வலுவூட்டல் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தொடர்ந்து உரையாற்றுகையில், 'ஏறாவூர் நகரத்தில் நாளாந்தம் சேரும் குப்பைகள் இந்த நகரப் பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றலுக்கான இடம் இல்லாததால் வேறுவழியின்றி ஏறாவூர் வாவிக்கரையோர ஒதுக்குப் புறத்தில் குவிக்கப்படுகின்றன.எனினும், இந்த வாவிக்கரையோரம் முழுவதையும் தூய்மையாகவும் அழகுறவும் வைத்து சூழலைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.
குப்பை மேட்டுப் பிரச்சினை ஒக்டோபர் மாதமளவில் முடிவுக்கு வந்து விடும். மட்டக்களப்பு -பதுளை வீதி, முதிரையடி ஏற்றத்தில் யுனொப்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் பாரிய திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் 8 உள்ளூராட்சிமன்ற பிரதேசங்களில் சேரும் திண்மக்கழிவுகள் கொண்டு செல்லப்படும் பொழுது இந்தப் பிரதேசத்தின் சுற்றாடல் பிரச்சினை முற்றாகத் தீர்ந்துவிடும்.
இதனதைத் தொடர்ந்து நகரத்தின் எழில் மிக்க கண்குளிர்ச்சியான மனோரம்யமான இடமாக இந்தப் பிரதேசம் மாற்றியமைக்கப்படும். அதன் மூலம் இந்த வாவிக்கரையோரத்தைப் பயன்படுத்தும் சிறுவர்கள், முதியோர் ஏனைய பொழுது போக்காளர்கள் நன்மையடைந்து கொள்வர்.' என்றார்.
15 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
35 minute ago