Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் வர்த்தக நகர நெடுஞ்சாலையை அகலமாக்கும் பணி எதிர்வரும் ஜுன் மாத இறுதி வாரத்தில்; ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மேற்படி நெடுஞ்சாலையை அகலமாக்கும் அபிவிருத்திப் பணி தொடர்பில் ஆராயும் கூட்டம், ஏறாவூர் நகர பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (28) நடைபெற்றது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளுக்கான வர்த்தக நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு வர்த்தகர்களின் நலன் கருதி நகர அபிவிருத்திக்காக கட்டடங்களை உடைக்கும் வேலைகள் ஜுன் இறுதி வாரத்தில் முன்னெடுப்பதற்கு வர்த்தகர்கள் இணங்கியதாகவும் அவர் கூறினார்.
நடுத்தெருவிலிருந்து இருமருங்குகளும்; 11.5 மீற்றர் விரிவுடையதாக ஏறாவூர் நகர நெடுஞ்சாலை இருவழி வாகனத் தடங்கள், நடைபாதை, வாகனத் தரிப்புக்கான இடம், வடிகான் என்பவற்றை உள்ளடக்கியதாக ஏறாவூர் நகர கடைத்தெரு அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலையை அகலமாக்கும் பணி இடம்பெறவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பொறியியலாளர்; ரீ.பத்மராஜா தெரிவித்தார்.
சுமார் 18 மாத காலத்தில் இந்த நகர நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணி பூர்த்தியாகும் எனவும் அவர் கூறினார்.
இதற்கென நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சு 1000 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நகர நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணியைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபைப் பிரிவுக்குள் 607 வர்த்தக நிலையங்கள், 347 குடிமனைகள், 187 வெற்றுக்காணிகள் காணப்படும்.
34 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
6 hours ago