ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஜூலை 23 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, புன்னைக்குடா வீதியை அண்மித்த அத்துப்பட்டி கிராமத்தில் 35 வயதுடைய மூன்று பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து டி--56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் 16 தோட்டாக்களும் கத்தியும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் மூன்று பேர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்களை ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago