2025 மே 07, புதன்கிழமை

ஏறாவூரில் குழந்தைப்பேறு இலவச வைத்திய முகாம்

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு. ஏறாவூரில்   முதலாம் திகதி   ஞாயிற்றுக்கிழமை   குழந்தையில்லாத  தம்பதியினருக்கான மாபெரும் இலவசக் கருத்தரிப்பு வைத்திய முகாமை (Advance

Fertility Clinic)  ஜெனிசிஸ்  IVF நவீன கருவாக்க  மய்ய  ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

ஏறாவூர், அல் முனீறா மகளிர் மஹா வித்தியாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் பகல் 1 மணிவரை இந்த இலவச வைத்திய முகாம் நடைபெறவுள்ளது.

இதில் குழந்தைப்பேறில்லாத  தம்பதிகள் கலந்துகொண்டு குழந்தைப்பேறு  சம்பந்தமான வைத்திய ஆலோசனைகள்,   வழிகாட்டல்கள், சிகிச்சைகளையும்

இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாமென்று ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் மணவை அசோகன் தெரிவித்தார்.

இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர்களான நிர்மலா சதாசிவம், ஸ்ரீரேவதி சதாசிவம், எம்.என். சதாசிவம் ஆகியோர் இந்த வைத்திய முகாமில் நேரடியாகக்

கலந்துகொண்டு வைத்திய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் மற்றும் சிறப்பு அதிதியாக ஏறாவூர்ப்பற்று

பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேலும் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X