2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூரில் முதல் தொற்றாளர்; பொதுச் சந்தை மூடப்பட்டது

Princiya Dixci   / 2020 நவம்பர் 05 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ. லதாகரனின் அறிவுறுத்தலுக்கமைய, ஏறாவூர், புன்னைக்குடா வீதியிலுள்ள ஏறாவூர் பொதுச் சந்தை, இன்று (05) முதல் மூடப்பட்டது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள மிச்நகர் கிராமத்தில், நேற்று முதன் முதலாக மீன் வியாபாரி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.

இதற்கும் மேலதிகமாக, ஏறாவூர் பொதுச் சந்தை வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் கிருமி நீக்கி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டதோடு, மேற்படி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அனைத்து சந்தை வியாபாரிகளும் சுகாதாரத் துறையினரால் பிசிஆர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனிடையே, ஏறாவூர் நகர பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கையை இறுக்கமாக்கும் பல தீர்மானங்கள் அதிகாரிகள் மட்டத்தில் நேற்று நடந்த கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியின் உயர் மட்டக் கூட்டத்தில் எட்டப்பட்டதாக, நகர சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .