Princiya Dixci / 2022 மே 22 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஏறாவூரின் கடந்த 9ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன் உட்பட 15 பேரை, விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி 15 பேரும், ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம், வீடு, அவரது உறவினரின் வீடு, ஹோட்டல், கடை தீவைப்பு மற்றும் 3ஆடைத்தொழிற்சாலைளை சேதப்படுத்தியமை தொடர்பாக, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய, மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குமுவினர் மேற்கொண்டு வந்த விசாரணையில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில், ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், நாளை (23) திங்கட்கிழமை க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.
சிறுவனை, ஏறாவூர் சுற்றுவா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (21) ஆஜர்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் க.பொ.தர சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சை நிலையத்துக்குக் கொண்டு சென்று பரீட்சை எழுத அனுமதிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஹோட்டல் கடையில் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் 14 பேரை, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜயர்படுத்தப்பட்டபோது, அவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுரை 15 பேரை கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்ட பலர் தலைமறைவாகியுள்ளதாகவும் மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.
தலைமறைவாகியவர்களில் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர் எனவும் தலைமறைவாகியுள்ள ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .