2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நகர சபை ஐ.தே.க வசமானது

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற றமழான் அப்துல் வாசித் அலி, இரண்டு மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

17 உறுப்பினர்களைக் கொண்ட ஏறாவூர் நகர சபையின் முதலாவது அமர்வு, பெரிதும் பரபரப்புக்கு மத்தியில் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இன்று (05) நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமர்வில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளருக்காக றமழான் அப்துல் வாசித் அலி மற்றும் முகமமது சாலிஹ் நழீம் ஆகிய இருவரின் பெயர்களும் முன்மொழியப்பட்டன.

இதில் றமழான் அப்துல் வாசித் அலிக்கு 9 வாக்குகளும் முகம்மது சாலிஹ் நழீமுக்கு 7 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதில் இரண்டு மேலதிக வாக்குகளால் ஏறாவூர் நகர சபை தவிசாளராக அப்துல் வாசித் அலி தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதித் தவிசாளருக்காக மீராலெப்பை ரெபுபாசம், முகம்மது சாலிஹ் நழீம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதில் முகம்மது சாலிஹ் நழீம் என்பவர் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து, பிரதித் தவிசாளராக மீராலெப்பை ரெபுபாசம் தெரிவுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X