2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஏறாவூர் நகர சபையின் பாதீடு சமர்ப்பிப்பு தோல்வி

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகர சபையின் 3ஆவது வருட பட்ஜெட், சபையின் இன்றைய (12) விசேட அமர்வில் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல்வாஸித்தால் சமர்ப்பிக்கப்பட்டபோது அது தோல்வி கண்டது.  

சபையின் சொந்த வருமானம், அரச துறைகளுக்கூடாகக் கிடைக்கின்ற மானியங்கள், ஒதுக்கீடுகள் உள்ளடங்கலாக சுமார் 231 மில்லியன் ரூபாய்க்கான பட்ஜெட், சபைத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டது.  

இதில், நகர சபையின் சொந்த வருமானம் சுமார் 45.8 மில்லியன் ரூபாயாகும்.  

இந்தப் பாதீடு, 2020 செப்டெம்பர் 30 வரையான தரவுகள், தகவல்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது என நகர சபையின் செயலாளர் முஹம்மது றபீக் ஷியாவுல்ஹக் தெரிவித்தார்.  

பட்ஜெட் வாசிப்பு முடிவடைந்ததும் சபையின் அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட போது, அது பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  

இதன்போது, பட்ஜெட்டுக்கு, எதிராக 12 பேரும் 4 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.  

சபை வாக்கெடுப்பின்போது, உள்ளூராட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில், உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் அனுப்பப்பட்ட விசாரணை அதிகாரியான தயாபரன் சபையில் பிரசன்னமாகியிருந்தார்.  

சபையின் வாக்கெடுப்பு முடிவடைந்து, கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர், பட்ஜெட் தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சபை அங்கத்தவர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .