Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு நுளம்பின் பரவலைத் தடுக்கும் முகமாக, ஏறாவூர் நகரசபைக்குட்பட்ட பிரதேசத்தை, டெங்கு அற்ற வலயமாக மாற்றுவதில், நகர சபை நிர்வாகம் உறுதியாக உள்ளதென, ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் ஐ. அப்துல் வாஸித் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்புச் சம்பந்தமாக, பிரதேசத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக, இன்று (24) கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், டெங்கு அற்ற சிறந்த சுற்றாடலை உருவாக்கும் முயற்சிக்கமைய, ஏறாவூரில், பொறுப்பிலுள்ள அதிகாரிகளும் பொது அமைப்புகளும் கலந்தாலோசித்து, சில தீர்மானங்களை எட்டியுள்ளனர் என அவர் கூறினார்.
வாராந்தம், ஜும்ஆ தொழுகைக்கு முன்னரான சன்மார்க்கப் பிரசார நேரத்திலும், இரவு நேரத் தொழுகைக்குப் பின்னரான சன்மார்க்கப் பிரசார நேரத்திலும், டெங்கு ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குதல்; சமூர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர், சனசமூக உத்தியோகத்தர், வட்டார உறுப்பினர் ஆகியோர் அடங்கிய கிராமிய மட்ட செயற்பாட்டுத் குழுக்களை மீள இயங்கச் செய்தல் போன்ற முக்கிய முடிவுகள் இங்கு எடுக்கப்பட்டன எனவும் அவர் கூறினார்.
மேலும், பாடசாலை நிர்வாகத்துடன் சேர்ந்து, பொருத்தமான ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுடன் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளல்; குடிநீர் பெறும் கிணறுகளுக்கு நுளம்புக் குடம்பிகளை அழிக்கும் மீன்களை வளர்த்தல்; அயலிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பாவனையிலுள்ள திண்மக் கழிவகற்றலுக்குப் பயன்படுத்தும் வாகனங்களைப் பெற்று, கொத்தணி முறையில் பாரிய அளவிலான சிரமதானப் பணிகளை மேற்கொள்ளல்; மாதாந்தம் ஒவ்வொரு வட்டார வட்டாரமாக புகை விசுறுதல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன என, அவர் மேலும் கூறினார்.
26 minute ago
38 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
47 minute ago
1 hours ago