2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

’ஏறாவூர் நவீன பொதுச் சந்தை நிர்மாணத்துக்கு அங்கிகாரம்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 09 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

நிர்மாணிக்கப்பட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் தடைப்படுத்தப்பட்ட  ஏறாவூர் நவீன பொதுச் சந்தையின் கட்டுமானப் பணிகள் அரசின் ஒப்புதலோடு, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தால் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், ஏறாவூர் பொதுச் சந்தை சகல விதமான கட்டுமான நியமங்களுக்குட்டு, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தால் நிருமாணிக்கப்பட்டு வரும் வேளையில், அது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் அநாமதேய முறைப்பாடுகளால் தடைப்படுத்தப்பட்டதாகும்.

“ஆனால், அந்த அநாகரிக சுயநலமிகளின் சூழ்ச்சிகளையும் முறியடித்து, ஏறாவூர் பொதுச் சந்தையின் நிர்மாணப் பணிகள் உடனடியாகத் துவங்குவதற்கு அரச அங்கிகாரம் கிடைத்துள்ளது. இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் அதன் சக்திக்குட்பட்டு, இந்த சந்தைக் கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை உயர் தரத்திலும் சிறப்பானதாகவும் பூர்த்தி செய்வதில் அக்கறை கொண்டுள்ளது.

“அதனடிப்படையில், இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும் அது பொதுமக்களின் பாவனைக்காக சந்தை வியாபாரிகளிடம் கையளிக்கப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .