2025 மே 19, திங்கட்கிழமை

ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் அடங்கும் ஏறாவூர் நகரப் பிரதேசத்தில் முழுமையான டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராசசிங்கம், இன்று (15) தெரிவித்தார்.

குறிப்பாக மிச்நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மிச்நகர், மீராகேணி ஆகிய கிராமங்களில் டெங்கு உற்பத்தியாகக் கூடிய இடங்களைத் துப்புரவு செய்யும் விசே‪ட நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் நகரசபை, செங்கலடி பிரதேச சபை, ஏறாவூர் பொலிஸ் நிலையம், ஏறாவூர் பள்ளிவாசல்கள், விளையாட்டுக் கழகங்கள், கிராம மட்ட அமைப்புகள், நலன்விரும்பிகள் ஆகியோர் டெங்கு உற்பத்தியாகிப் பரவக் கூடிய இடங்களைத் துப்புரவு செய்வதில் ஒத்துழைப்பு வழங்கிவருவதாகத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் பொதுமக்கள் அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஏறாவூர் நகர பிரதேசம் மற்றும் நகரை அண்டிய ஏறாவூர்ப்பற்று நிர்வாகத்துக்கு உட்பட்ட மிச்நகர், மீராகேணி, சத்தாம்ஹுஸைன், ஐயன்கேணி ஆகிய பகுதிகளிலிருந்து டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 35க்கும் மேற்பட்டோர் கடந்த இரு வார காலத்தில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஏறாவூர்ப் பிரதேசத்தில் டெங்கு விழிப்புணர்வு  அவதான நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X