2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஏறாவூர் பெண் கொழும்பில் மரணம்

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூரைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, கொழும்பில் இன்று (03) அதிகாலை மரணமடைந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு கிழக்கு, முல்லேரியா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

ஏறாவூரில் இரண்டாவது கொரோனா மரணம் இதுவாகும். ஏறாவூரைச் சேர்ந்த ஆணொருவர், (வயது 56) கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த சனிக்கிழமை (27) அதிகாலை மரணமடைந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 8 மரணங்கள் நிகழ்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .