ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு இன்று (17) முதல் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14 மாதங்களாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய தலைமைப் பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமான நலின் ஜயசுந்தர தற்போது, கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ரத்னாயக்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்களை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .