Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஏறாவூர் கிளையும் இணைந்து, ஏறாவூரில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல் நிருவாகிகளுடன் நடத்திய கலந்துரையாடலை அடுத்து, 14 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இணைந்த தீர்மானங்களை, ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகம், மஹல்லாவாசிகள், பொதுமக்கள் ஆகியோர் பின்பற்றி ஒழுகுமாறு, அன்பாக கேட்டுக்கொள்வதாக, பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா ஏறாவூர் கிளை ஆகியவற்றின் செயலாளர்கள் கேட்டக் கொண்டுள்ளார்கள்.
அந்த இணைந்த தீர்மானத்தின்படி,
1. பள்ளிவாசல் மஹல்லாக்களில் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், சம்மேளன மற்றும் ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்களைக் கொண்டு, ஒவ்வொரு பள்ளிவாசலுக்குமான சமாதானக் குழு அமைத்து, அங்கு இடம்பெறும் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
2. ஜம்இய்யதுல் உலமாவின் சிபாரிசுக் கடிதம் இல்லாமல் வெளியூர் நோயாளர்கள், ஏறாவூரில் நிதி வசூலிக்க அனுமதிப்பதில்லை.
3. ஊரில் நடைபெறும் திருமணங்களின்போது மணவாளன், மணப்பெண் ஆகியோரின் மஹல்லாப் பள்ளிவாசல்களில் திருமணத்துக்கு ஏழு நாளைக்கு முன்னர் திருமண விவரங்களை, பள்ளிவாயலில் காட்சிப்படுத்தல் வேண்டும்.
வெளியூர் மணவாளர்களாக இருந்தால், அவர்களது ஊர்ப்பள்ளிவாசல் அத்தாட்சிப்படுத்தல் கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவசர திருமணங்களாக இருந்தால், ஜம்இய்யதுல் உலமாவின் கவனத்துக்குக் கொண்டு வந்து, அனுமதி பெறப்படல் வேண்டும்.
4. பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் வியாபாரம் சார்ந்த விளம்பரங்களை அனுமதிப்பதில்லை.
5. வெள்ளிக்கிழமை தினத்தை ஊர் தழுவிய விடுமுறையாகப் பிரகடனப்படுத்தல். (மேசன், ஓடாவி, கூலியாட்கள் போன்றவரை அன்றைய தினம் வேலைக்கு அமர்த்துவதில்லை)
6. ஒவ்வொரு பள்ளிவாசலிலும் மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் (இரவு வேளைகளில்) யாசகம் பெறுபவர்கள், (ஆண், பெண்) பள்ளிவாசல் வளாகத்தில் வசூலுக்கு நிற்பதைத் தவிர்த்தல்.
7. வெளியூர் வாசிகள் ஊரில் தங்கினால் குறித்த மஹல்லா நிர்வாகத்துக்கு அறிவித்தல்.
8. வெளியூர்வாசிகளுக்கு, வீடு வாடகைக்கு வழங்குவதாக இருந்தால் குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அறிவித்தல் வேண்டும்.
9. மஹல்லாவாசிகள் மார்க்கத்துக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அப்பள்ளிவாசல் நிர்வாகம் விசாரித்தல்.
10. பள்ளிவாசல் நிர்வாகத்தெரிவின் போது, சம்மேளனத்துக்கும் ஜம்இய்யாவுக்கும் அழைப்புவிடுத்தல் வேண்டும்.
11. ஒவ்வொரு பள்ளிவாசலில் இருந்தும் சம்மேளனத்தின் தொண்டர் அணிக்கு 05 பேர் வழங்குதல் வேண்டும்.
12. 03 மாதத்துக்துக்கு ஒரு முறை பள்ளிவாசலின் கணக்குகள் விபரம் பள்ளிவாயல் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தல் வேண்டும்.
13. பள்ளிவாசல் மஹல்லாவாசிகளின் பெயர்ப்பட்டியலைக் காட்சிப்படுத்தல் வேண்டும்.
14. பள்ளிவாசலில் நடைபெறும் மதரசாக்கள் நிலைமை தொடர்பாக நிர்வாகம் கவனம் எடுத்தல் வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago