2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஐ.ம.சு.கூட்டமைப்புடன் உறவை துண்டிக்கவில்லை: கந்தையா யோகவேல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான உறவை நாம் துண்டிக்கவில்லை. தொடர்ந்து அக்கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக இருந்து வருகின்றோம்' என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் கந்தையா யோகவேல் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் 41ஆவது பிறந்ததினத்தையொட்டி மட்டக்களப்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரத்ததானம் செய்யும் நடவடிக்கை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மக்களுக்கு பணியாற்றுவதற்காக எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று இந்தக் கட்சியின் தலைவரும் செயலாளரும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலும், எமது கட்சியின் சகல செயற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கின்றோம்.

எமது கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வகுத்த வழியில் எமது கட்சி பயணிக்கின்றது. எமது கட்சிக்குள் எந்தவித இழுபறிகளோ, குழப்பங்களோ கிடையாது. அன்று எப்படி இந்தக் கட்சி எப்படி இயங்கியதோ இன்றும் அதேபோன்று தளர்வில்லாமல் எமது கட்சியின் பயணம் தொடர்கின்றது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X