2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’ஒன்றிணைந்து செயலாற்ற முன்வாருங்கள்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சி பேதங்களையும், பிரதேச வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமையுடன் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செலாற்றுவதற்கு முன்வருமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை, பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவியை உத்தியோக பூர்வமாக பதவியேற்கும் நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமது முதல் உரையை நிகழ்த்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தெர்ர்ந்தும் உரையாற்றுகையில், "பிரதேச மட்டத்தில் மக்கள் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அவ்வாறான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி, உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்கு அரசியல் பிரதிநிதிகளுடன் அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இந்த பிரதேச சபையை மக்கள் சபையாகவே நான் கருதுகின்றேன். மக்களின் நலனுக்காகவும், பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் எந்த நேரமும், எச்சந்தர்ப்பத்திலும் இச்சபை மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும். எமக்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வாறுறெல்லாம் உதவிகைளப் பெற முடியுமோ, அவ்வாறெல்லாம் பெற்று மக்களுக்கான பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X