2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஒப்பந்த அடிப்படையில் தவிசாளர் பதவி

எம்.எம்.அஹமட் அனாம்   / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவி இரண்டு வருடங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம்பெற்றதன் பின்னர் தற்போதை தவிசாளர் ஐ.ரி.அஸ்மிக்கும், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபருக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் பிரதியமைச்சர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டிற்கு அமைய, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு,  தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

கூட்டாச்சியின் படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தவிசாளர் பதவியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உப தவிசாளர் பதவியும் வழங்கப்படும். கட்சிகளுக்கிடையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கான தவிசாளர் பதவி சுழற்சி முறையில் முதல் இரண்டு வருடங்களுக்கு ஐ.ரி.அஸ்மிக்கும், மிகுதி இரண்டு வருடம் ஏ.எம்.நௌபருக்கும் வழங்கப்படும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X