Freelancer / 2023 மார்ச் 16 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியில் நாய் ஒன்று தனது எஜமானர் மரணமடைந்த நிலையில், சடலத்தை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை கண்ணீருடன் சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது.
குறித்த நாயை வளர்த்து வந்த மூதாட்டி புதன்கிழமை (15) மரணமடைந்துள்ளார்.
மூதாட்டி மரணமடைந்ததை உணந்து கொண்ட நாய் கண்ணீர் சிந்தி மூதாட்டியின் உடல் அருகில் நின்றுள்ளது.
மரணமடைந்த மூதாட்டியின் உடல் அவரது மகளின் வீட்டிலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கிண்ணையடி இந்து மயானத்தில் வியாழக்கிழமை (16) நல்லடக்கம் செய்யப்பட்டது.
மூதாட்டியின் இறுதிக் கிரியையில் மக்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பயணித்த நாய் பட்டாசு சப்தத்தையும் பொருப்படுத்தாமல் சென்று தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளது.
நல்லடக்கத்தின் பின்னர் மீண்டும் நாய் மூதாட்டி வசித்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


50 minute ago
52 minute ago
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
52 minute ago
20 Nov 2025