வா.கிருஸ்ணா / 2020 மார்ச் 08 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஐக்கிய தேசியக் கட்சியானது இன்னும் ஒற்றுமைப்படாமல் இருப்பதென்பது எதிர்காலத்தில் பலமானதொரு சக்தியாக பயணிப்பதற்குரிய விடயத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் விடயமாகும்” என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
“ஆளும் கட்சி அசூரவேகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலையும் எதிர்க்கட்சி பலவீனமான சூழ்நிலையும் காணப்படுமானால், அது சிறுபான்மை சமூகத்துக்குப் பாதிப்பாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் என்ற விடயத்தில் தற்போது இழுபறி நிலை காணப்படுகின்றது. இது அவர்களின் உட்கட்சி விவகாரமாக இருந்தாலும்கூட, எதிர்க்கட்சி என்பது பலம் பெற வேண்டும். அது ஆளுங்கட்சிக்கு சவாலாக இருக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தில் பேணப்படுகின்ற விடயமாகும்” என்றார்.
ஆளுங்கட்சி அசுர பலத்தோடு ஆட்சியை பிடிக்கின்ற ஒரு சூழ்நிலையும் எதிர்க்கட்சிகள் பலவீனமடையும் சூழ்நிலையும் காணப்படுமாக இருந்தால் இன்றைய சூழலில் பேரினவாதம் என்பது மிகவும் ஓங்கக்கூடிய நிலைமையை அது ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.
இது சிறுபான்மை தேசிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக இருக்குமெனத் தெரிவித்த அவர், “தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றுமையாக இணைந்து பயணிப்பதன் மூலமாக எதிர்காலத்தில் ஒரு சவால் மிக்க சக்தியாக அமைந்து, நாட்டின் தேசியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சர்வதேச ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தங்களை வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago