Freelancer / 2022 ஜனவரி 15 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் கீழுள்ள ஆற்றில் இன்று சனிக்கிழமை 3 மணியளவில் சடலமொன்றில் தலை மிதந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
ஓட்டமாவடிப் பாலத்தினால் நபரொருவர் சென்று கொண்டிருந்த போது ஆற்றில் சடலமொன்றின் தலை மிதந்த நிலையில் காணப்படுவதை கண்டுள்ள நிலையில், கிரான் பகுதியில் காணாமல் போன மாணவர்களின் சடலமோ என்ற சந்தேகத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபரின் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன், கல்குடா சுழியோடிகள் இரண்டு படகுகளில் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் மிதந்தது சடலமா, அல்லது ஏதும் கழிவுப் பொருட்களா என பொலிஸார் மற்றும் சுழியோடிகள் சந்தேகத்தோடு ஆற்றில் பல்வேறு பகுதிகளிலும் தேடிக் கொண்டிருப்பதை காண முடிவதுடன், இதனை கேள்வியுற்ற மக்கள் ஓட்டமாவடி பாலத்தில் குவிந்து காணப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

4 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
23 minute ago