2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

ஓட்டமாவடி விபத்தில் இளைஞன் பலி

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஜூலை 22 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி இளைஞர் சிகிச்சை பலனின்றி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளாரென, அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 

ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுலைமா லெப்பை ஜனூஸ் (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் வியாழக்கிழமை (20) பிற்பகல் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி வெளியே வீசப்பட்டு கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டு, படுகாயமடைந்தார்.

இவ்விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞரும, பஸ்ஸின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாஸா, ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் இன்று (22) நல்லடக்கம் செய்யப்படுமென உறவினர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X