2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஓட்டமாவடியில் இரத்ததான முகாம் நடத்த ஏற்பாடு

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாமொன்று, எதிர்வரும் புதன்கிழமை (24) நடைபெறவுள்ளதாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தெரிவித்தார்.

நாட்டின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 24ஆம் திகதியன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆண், பெண் என இரு பாலாரும் இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்குமாறு, இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் வேண்டிக் கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X