2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஓட்டமாவடியில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் மாசு; மக்கள் அவதி

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால், மட்டக்களப்பு மாவட்டம் - ஓட்டமாவடிப் பகுதிக்கு விநியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாசடைந்து காணப்படுவதாக, பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு உன்னிச்சைக் குளத்திலிருந்து பெறப்படுகின்ற நீர், வவுணதீவு சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த பின்னர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.

இவ்வாறு விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் சில வேளைகளில் மாசடைந்து காணப்படுவதாகவும், சுவை வித்தியாசமாக உள்ளதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டமாவடிப் பகுதியின் சில இடங்களில் நேற்று (11) பெறப்பட்ட குடிநீர், நிறம், சுவை வித்தியாசம் கொண்டதாகக் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரச்சினை அவ்வப்போது இடம்பெறுவதால் இதனை ஆய்வுக்குட்படுத்தி பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படா வண்ணம் குடிநீரை வழங்குப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X